திருவக்கரை கல்மரப் பூங்கா

அமைவிடம் - திருவக்கரை கல்மரப் பூங்கா
ஊர் - திருவக்கரை
வட்டம் - வானூர்
மாவட்டம் - விழுப்புரம்
வகை - கல்மரம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்மரம்
பண்பாட்டுக் காலம் - தொல்பழங்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1781
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் (sonneret)

விளக்கம் -

இங்கு இருக்கும் கல் மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு 200 மர தண்டுகள் சுமார் 247 ஏக்கர்(1.00) பரப்பளவில் உள்ளது. மரங்கள் அனைத்தும் 3 முதல் 15 மீட்டர் நீளமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இங்கு இருந்த காட்டு பகுதியானது பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரும் வெள்ளத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்க வேண்டும்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - விக்கிப்பீடியா
சுருக்கம் -

திருவக்கரையில் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த தொல்லுயிர் எச்சமான கல்மரங்கள் கண்டறியப்பட்டு இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலாளர் சொன்னேரெட் (sonneret) என்பவரால் தான் முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து கண்டறிந்தார். திருவக்கரை தொல்லியல் களம் 1781இல் ஆவணப்படுத்தப்பட்டது.